ADDED : அக் 01, 2026 02:53 AM
கரூர்: கரூர் அருகே கட்டட சுவர் இடிந்து விழுந்ததில், வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா பர்ஹன்ஸ் பகுதியை சேர்ந்-தவர் சாய்பூல் மாலிக், 30; இவர் குடும்பத்துடன், கரூர் அருகே வெங்கமேட்டில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கரூர் அருகே ஈரோடு சாலையில், சரண்யா என்பவரின் கட்டடத்தில் வேலை செய்து வந்தார். அப்போது, எதிர்பாராதவித-மாக கட்டட சுவர் சாய்பூல் மாலிக் மீது விழுந்தது. இதில் படு-காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, சாய்பூல் மாலிக் மனைவி சபீனா லஸ்கர், 24, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கட்டட உரிமையாளர் சரண்யா, 36, மேஸ்திரி சத்தியராஜ், 34, ஆகியோர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
