தீபாவளிக்கு ரூ.5,000 போனஸ் கேட்டு கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
தீபாவளிக்கு ரூ.5,000 போனஸ் கேட்டு கட்டுமான தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2026 07:19 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர் வெண்ணைமலை தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன், மாவட்ட கட்டு
மான தொழிலாளர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட
தலைவர் ராஜாமுகமது தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர்களுக்கு,
3,000 ரூபாய் மாத ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸாக, 5,000
ரூபாய் வழங்க வேண்டும். 55 வயதிற்கு மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு,
ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு கேட்டு விண்ணப்பித்து
காத்திருக்கும், தகுதியான அனைவருக்கும், காலம் தாழ்த்தாமல் வீடு
கட்ட நிதி உதவி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலர் சுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
