/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டட தொழிலாளர் நலசங்க மே தின ஆலோசனை கூட்டம்
/
கட்டட தொழிலாளர் நலசங்க மே தின ஆலோசனை கூட்டம்
ADDED : மே 02, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
கரூரில், மாவட்ட கட்டட தொழிலாளர் நலசங்கம் சார்பில், மே தினத்தை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். கட்டட தொழிலாளர் ஓய்வூதியத்தை, 5,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., வசதி செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின், தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சங்க செயலாளர் கணேஷ், பொருளாளர் செல்வகுமார், துணை செயலாளர் முத்து மாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.