/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளியில் ஆலோசனை கூட்டம்
/
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளியில் ஆலோசனை கூட்டம்
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளியில் ஆலோசனை கூட்டம்
கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் பள்ளியில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 26, 2025 01:05 AM
கரூர், :கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் உமா தலைமையில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், இடையில் நின்ற மாணவியர்களை மீண்டும் பள்ளிக்கு கல்வி கற்க அழைப்பது, பள்ளியில் கட்டுமான பணிகள், மின் இணைப்பு பணிகளை சரி செய்வது, சோலார் இயக்க பயன்பாட்டுக்கு தனி கவனம் செலுத்தி நிறைவேற்றி தர, மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், கல்வி ஆலோசகர் மேலை பழனியப்பன், ஆசிரியைகள் உள்பட பலர் பங்கேற்றனர்.