/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்
/
பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்
பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்
பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 03, 2025 12:57 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை குறித்தான புகார் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமை வகித்தார். மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் பற்றியும், அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு முகாம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, புகார் குழு உறுப்பினர்களுடன் கலைந்துரையாடி, மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், கரூர் எஸ்.பி.,ஜோஸ்தங்கையா, மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.