தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் சுற்று வட்டாரத்தில் தொடர் மழை

கரூர் சுற்று வட்டாரத்தில் தொடர் மழை

கரூர் சுற்று வட்டாரத்தில் தொடர் மழை


ADDED : அக் 18, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மதியம் மழை பெய்தது.

வங்க கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பல பகுதிகளில் மழை பெய்தது. மேலும், நேற்று மதியம் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதை தொடர்ந்து, குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: கரூர், 7.20, க.பரமத்தி, 11.40, தோகைமலை, 4, கிருஷ்ணராயபுரம், 8, மாயனுார், 6, பஞ்சப்பட்டி, 2.40, பாலவிடுதி, 4 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.58 மி.மீ., மழை பதிவானது.

* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 12 ஆயிரத்து, 129 கன அடியாக இருந்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு, 10 ஆயிரத்து, 659 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 8.95 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us