/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் தொடர் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : அக் 23, 2025 01:39 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.
கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை, குளித்தலை, கடவூர், தோகைமலை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு துவங்கி, நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இதனால், பள்ளி
களுக்கு விடுமுறை விடப்பட்டது.கரூர் மாநகராட்சி பகுதியில் தான்தோன்றிமலை, சுங்ககேட், காந்திகிராமம், கோதுார், வெங்கமேடு சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். காலி இடங்களில் குளம் போல மழைநீர் தேங்கி நின்றது. காலை, 10:00 மணிக்கு பின், மழை குறைந்து வெயில் அடித்ததால், மழைநீர் வடிய தொடங்கியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணராயபுரம், வயலுார், பாப்பகாப்பட்டி, சிவாயம், கருப்பத்துாரில் நேற்று மதியம் மழை பெய்தது. இதனால் மரவள்ளிக்கிழங்கு, நெல், உளுந்து மற்றும் மானாவாரி பயிர்களான எள், சோளம், கம்பு, துவரை ஆகிய பயிர்களுக்கு மழைநீர் கிடைத்துள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தீவன புல் கிடைத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் கன மழை
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. ஒலிஷா நகர் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழையால், இப்பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, பள்ளப்பட்டி நகராட்சி சார்பில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலம், தேங்கியிருந்த மழை நீரை அப்புறப்படுத்தி, கால்வாயில் விடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை நகர்மன்ற தலைவர் முனவர் ஜான், நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அரவக்குறிச்சியில், 96 மி.மீ., மழை பதிவானது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8.00 மணி வரை பெய்த மழை அளவு விபரம்:
அரவக்குறிச்சியில், 96 மி.மீ., அணைபாளையம், 66.40, கரூர், 23.40, க.பரமத்தி, 17, குளித்தலை, 39, தோகைமலை, 39.40, கிருஷ்ணராயபுரம், 61.40, மாயனுார், 52, பஞ்சப்பட்டி, 41.60, கடவூர், 27, பாலவிடுதி, 30, மைலம்பட்டி, 12 மி.மீ., என மொத்தம், 505.30 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக, 42.11 மி.மீ., மழை பெய்தது.