/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் ஒப்பந்த பணியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
/
கரூரில் ஒப்பந்த பணியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூரில் ஒப்பந்த பணியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
கரூரில் ஒப்பந்த பணியாளர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 16, 2025 01:27 AM
கரூர்,கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள், இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் என, 160 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது, மகாராஷ்டிராவை சேர்ந்த சுமித் என்ற தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
நேற்று முன்தினம், ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும் என அந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இதை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நிறுவனத்தின் மேலாளர் மணிவண்ணன், பேச்சுவார்த்தி நடத்தி, ஒரு மணி நேரம் கூடுதலாக பணிபுரிய வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து
அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று, 30க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.