/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பகவதி அம்மன் கோவில் மணி திருடிய சமையல் மாஸ்டர் கைது
/
பகவதி அம்மன் கோவில் மணி திருடிய சமையல் மாஸ்டர் கைது
பகவதி அம்மன் கோவில் மணி திருடிய சமையல் மாஸ்டர் கைது
பகவதி அம்மன் கோவில் மணி திருடிய சமையல் மாஸ்டர் கைது
ADDED : ஜூலை 02, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,
கரூரில், கோவிலில் உள்ள மணியை திருடிய, சமையல் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.
கரூர், முத்துராஜபுரத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. அதில், வைக்கப்பட்டிருந்த மணியை கடந்த ஜூன் மாதம், 23 முதல் காணவில்லை.
இதுகுறித்து, கார்த்திகேயன், 43, என்பவர் புகார் கொடுத்தார். பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில், கோவிலில் மணியை திருடியது, நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் மோகன், 70, என்பதும், மணியை, 300 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது கரூரை சேர்ந்த செல்வி, 46, என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.