/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வரும் 20 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : ஜூன் 07, 2025 01:24 AM
கரூர், கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பத்தை வரும், 20க்குள் விண் ணப்பிக்க வேண்டும் என, கரூர் துணை பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கரூர் துணை பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம், கரூர் ஜவஹர் பஜாரில் துணை பயிற்சி நிலையம் செயல்படுகிறது. அதில், 2025-26ம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை, www.tncu.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நடந்து வருகிறது.
பயிற்சியில் சேர, 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது வரம்பு இல்லை. குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அல்லது எஸ்.எஸ்.எல்.சி., முடித்த பிறகு, மூன்றாண்டு பட்டய படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய். பயிற்சி கட்டணம், 20 ஆயிரத்து, 750 ரூபாய். விண்ணப்பங்கள் மற்றும் கட்டணம் இணைய வழி மூலம் செலுத்த வேண்டும்.விருப்பம் உள்ளவர்கள் வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.