ADDED : ஆக 05, 2026 05:18 AM

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதியில், கொத்தமல்லி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி,
மகிளிப்பட்டி, கணக்கம்பட்டி, பஞ்சப்பட்டி, சிவாயம்,
குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி பகுதிகளில்
குறைந்த பரப்பளவில், கிணற்று நீர் பாசன முறையில் விவசாயிகள்
கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர்.
கொத்தமல்லி விதைகள்
துாவப்பட்டு, செடிகள் பசுமையாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும்
செடிகளின் நடுவில் வளர்ந்த களைகளை, விவசாய கூலி தொழிலாளர்கள் அகற்றி
உள்ளனர். கொத்தமல்லி செடிகளை செடிகள் விவசாயிகள் பறித்து, சிறிய
கட்டுகளாக உள்ளூர் வார சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
கொத்தமல்லி கட்டு ஒன்று, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொத்தமல்லி சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம்
கிடைக்கிறது.
