/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொத்தமல்லி தழை வரத்து சரிவால் விலை உயர்வு
/
கொத்தமல்லி தழை வரத்து சரிவால் விலை உயர்வு
ADDED : செப் 23, 2024 04:35 AM
கரூர்: கொத்தமல்லி தழை விளைச்சல் குறைந்துள்ளதால், வரத்தும் குறைந்துள்ளது. இதனால், விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை, ஆக., மாதங்களில் கொத்தமல்லி தழை, ஒரு கிலோ, 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்றது. இந்நி-லையில் நடப்பு செப்., மாதம், கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில், கொத்தமல்லி விளைச்சல் குறைந்தது. இதனால், புதிய கொத்தமல்லி தழை வரத்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு குறைந்தது. இதனால், விலை அதிகரிக்க தொடங்கியது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், வெயில் காரணமாக, கொத்தமல்லி செடிகள் கருக தொடங்கின. மேலும், தேனி மாவட்டம் சின்னமனுார், கம்பம், திண்டுக்கல் மாவட்டம், பழநி, ஒட்டன் சத்திரம் பகுதிகளில் இருந்தும் கொத்-தமல்லி தழை வரத்து குறைந்தது. இதனால், கொத்தமல்லி தற்-போது, 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விலை அதிகரித்துள்-ளது. வரும் நவ., மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம-டையும் பட்சத்தில், வரும் தை மாதம் வரை கொத்தமல்லி தழை விலை குறைய வாய்ப்புண்டு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.