தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குறைவான நீரை பயன்படுத்தி சோளம் சாகுபடி மும்முரம்

குறைவான நீரை பயன்படுத்தி சோளம் சாகுபடி மும்முரம்

குறைவான நீரை பயன்படுத்தி சோளம் சாகுபடி மும்முரம்


ADDED : மார் 28, 2026 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; குறைவான தண்ணீரை பயன்படுத்தி, சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமரா-வதி அணையில் இருந்து, ஆற்றில் சம்பா சாகுப-டிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது..

சம்பா நெல் அறு-வடை நிறைவு பெற்-றதால், குறுகிய கால பயிரான சோளம், கால்ந-டைகளின் தீவனத்துக்காக, அமராவதி ஆற்றுப்ப-குதிகளில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோடை மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்று பகுதி-களான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ண-ராய-புரம் வட்டாரத்தில் சோளம் பயிரிட தொடங்கி-யுள்ளனர். இதற்காக நிலத்தை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வறட்-சியை தாங்கி வளரும் தன்மை உடையதால் சோளம் விதைக்கப்படுகிறது. தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் சோளம் பயிரி-டலாம். சித்திரை, மாசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் சோளம் சாகுடிக்கு ஏற்றது. சித்திரை மாதத்தில் மேற்கில் இருந்து, கிழக்கு நோக்கி காற்று அடிக்கும் போது அயல் மரகந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் கூடுதலாக இருக்கும். ஆகவே சித்திரை மாத பட்டமே மிகச்சிறந்ததாக அமைகிறது.

இதேபோல் சோளம் சாகுபடி செய்வதற்கு முன்பு, 4 முறை நன்றாக உழவு பணிகளை செய்ய வேண்டும். பின் வயலில் மண் கட்டிகள், கல், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் மண்ணை பொது பொதுப்புடன் வைத்திருக்க வேண்டும். கடைசி உழவின் போது, 5 டன் மக்கிய தொழு உரங்களை நிலத்தில் பரப்பி விட்டு உழவு பணி-களை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us