/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.7.49 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
/
ரூ.7.49 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
ரூ.7.49 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
ரூ.7.49 கோடி மதிப்பில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கம்
ADDED : ஜன 06, 2026 06:41 AM
கரூர்: கரூர் மாநகராட்சியில், 7.49 கோடி மதிப்பீட்டில்,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையும் நடந்தது.
கரூர் வேலுச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழுது மற்றும் பராமரிப்பு பணி-களையும், திருவள்ளுவர் நகரில், 7.80 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி, என்.எஸ்.பி., நகரில், 10.80 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, பெரிய குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழுது மற்றும் பராமரிப்பு பணி.
31வது வார்டு திருப்பதி லே அவுட் 5வது கிராஸில், 15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, மூலக்காட்டானுார் மற்றும் பொன்நகர் நீருந்து நிலை-யத்தில், 36.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் அளவு மானி வழங்கி மற்றும் இயக்குதல், கரூர்- திருச்சி ரோடு தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், 12 லட்சம் ரூபாய் மதிப்-பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணிகளை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் தென்புற பகுதியில், 2.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்தும், கரூர் பசுபதி பாளையம் மாநகராட்சி நடு
நிலைப்பள்ளியில், 7.56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டும் பணி, நெரூர், மேலமாயனுர் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் பாலம்மாள்-புரம் குளத்துப்
பாளையம் நீருந்து நிலையத்தில், 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் அளவுமானி தானியங்கி மின்தேக்கி, நீர்மூழ்கி பம்பு செட், பாதுகாப்பு உபகரணங்கள் வினியோகம் மற்றும் சோதனை செய்து இயக்குதல் என மொத்தம், 7.49 கோடி மதிப்பீட்டில், 12 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும் மற்றும் 17 புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மண்டலக்-குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

