/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
/
மாநகராட்சி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 25, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், சங்க அலுவலகத்தில் நடந்தது.
அதில், மத்திய அரசு ஜனவரி மாதம் முதல், 4 சதவீத அகவிலைப்படியை அறிவித்தது போல, தமிழக அரசும் அறிவிக்க வேண்டும், 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், துணைத்தலைவர் அஹமத் கபீர், செயலாளர் சேகர், துணை செயலாளர் நடராஜன், பொருளாளர் ரகுநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

