/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முற்செடிகளை அகற்ற கவுன்சிலர் கோரிக்கை
/
முற்செடிகளை அகற்ற கவுன்சிலர் கோரிக்கை
ADDED : நவ 14, 2025 01:34 AM
குளித்தலை, கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள முற்செடி
களை அகற்ற வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர் சந்துரு, உதவி கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.குளித்தலை சுங்ககேட் முதல், மணத்தட்டை வரை கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தென்கரை பாசன வாய்க்கால் கரையில் முற்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால், நெடுஞ்சாலை துறை மூலமாக வைக்கப்பட்ட பெயர் பலகையும் தெரியாத வகையில் மறைந்துள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, முற்செடிகளை அகற்றி, வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் சந்துரு, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

