/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
யூனியன் கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் மறியல் போராட்டம்
/
யூனியன் கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் மறியல் போராட்டம்
யூனியன் கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் மறியல் போராட்டம்
யூனியன் கமிஷனரை கண்டித்து கவுன்சிலர்கள் மறியல் போராட்டம்
ADDED : டிச 20, 2024 01:14 AM
குளித்தலை, டிச. 20-
கரூர் மாவட்டம், குளித்தலை யூனியன் அலுவலகத்தில் நேற்று சாதாரண கூட்டம் நடைபெற இருந்தது. யூனியன் குழு தலைவர் விஜய விநாயகம், அ.தி.மு.க., துணைத் தலைவர் இளங்கோவன், தி.மு.க., கவுன்சிலர்கள் முருகேசன், அறிவழகன், ராஜேஸ்வரி, சத்யா, சங்கீதா, அ.தி.மு.க., கவுன்சிலர் கவுரி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர்.
அலுவலகம் கூட்ட அரங்கம் பூட்டப்பட்டு, கமிஷனர் ராஜேந்திரன் விடுப்பில் சென்றது தெரியவந்தது. தீர்மான புத்தகம் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கமிஷனர் ராஜேந்திரனை கண்டித்தும், தீர்மான புத்தகத்தை காணவில்லை என்றதாலும், யூனியன் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம், யூனியன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த யாரும் முன் வராததால். அதிருப்தியடைந்த யூனியன் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் கோட்டைமேடு நான்கு வழிச்சாலையில், சாலையில் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை இன்ஸ்பெக்டர் உதய குமார், போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம், போக்குவரத்துக்கு வழி விட்டு உங்கள் கோரிக்கையை கூற வேண்டும். மேலும், உங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். போராட்டத்தால், 30 நிமிடம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் சாதாரண கூட்டம், நாளை நடைபெறும் என
உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.