/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா போராட்டம்
/
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா போராட்டம்
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா போராட்டம்
டவுன் பஞ்சாயத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா போராட்டம்
ADDED : ஆக 30, 2025 01:24 AM
கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டத்தில், டவுன் பஞ்சாயத்தை கண்டித்து கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., பகுதியில், மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், குடிநீர் வசதியுள்ள வீடுகளுக்கு முறையான ரசீது வழங்குதல் தாமதம் போன்ற காரணங்களால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
டவுன் பஞ்.,நிர்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. மக்கள் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வலியுறுத்தி, நேற்று மதியம், 3:00 மணிக்கு டவுன் பஞ்சாயத்து 10 வார்டு கவுன்சிலர் தேவி நாகராஜன் மக்களுடன் சேர்ந்து டவுன் பஞ்., வளாகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.