/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கலைக்கல்லுாரியில் 2 வது நாளாக கலந்தாய்வு
/
அரசு கலைக்கல்லுாரியில் 2 வது நாளாக கலந்தாய்வு
ADDED : ஜூன் 04, 2025 01:20 AM
கரூர் :கரூர் அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2025-26) கலந்தாய்வு கூட்டம், நேற்று இரண்டாவது நாளாக நடந்தது. அதில், சிறப்பு பிரிவுகளான என்.சி.சி., முன்னாள் படை வீரர்களின் வாரிசு
கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான, கலந்தாய்வு கூட்டம், இரண்டாவது நாளாக நடந்தது. அதில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு முதலாமாண்டு
சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது, கல்லுாரி முதல்வர் ராதா கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
இன்றும், நாளையும், நாளை மறுநாளும் பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம், பி.எஸ்.சி., பாட பிரிவு
களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.