/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
/
புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
புன்னம் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ADDED : அக் 04, 2024 03:09 AM
கரூர்: புன்னம், அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் தலைமை வகித்தார். கோவில், பள்ளி வளாகம், துாய்மை பணி, மரக்கன்று நடுதல், சுற்றுசூழல், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, காலை மற்றும் மாலை நேரங்களில் மனநல ஆலோசனை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு, தியானம், யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சி, ரத்ததானம், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் அறிவு திருக்கோவில் செயலாளர் பாலச்சந்தர், மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவகுமார், மாவட்ட தொடர்பு அலுவலர் யுவராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.