/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
3 பேர் தலைமறைவு கோர்ட் ஊழியர் புகார்
/
3 பேர் தலைமறைவு கோர்ட் ஊழியர் புகார்
ADDED : ஆக 08, 2025 01:15 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மாயனுார் போலீஸ் சரகத்தில், திருட்டு வழக்கில் கிருஷ்ணராயபுரம் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த, உப்பிலியபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன். கள்ளன் காடு ஜெயமணி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த சுபாஷ்சந்திர போஸ், சிவகங்கை மாவட்டம், மேலக்கார வீதி சேர்ந்த தினேஷ்வேலன் ஆகியோருக்கு, திருட்டு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் மூலம் கடந்த ஜூன், 9ல் சம்மன் கொடுக்கப்பட்டது.
ஜூன், 20ல் மூன்று பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்றம் மூவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, நீதிமன்ற இளநிலை உதவியாளர் சிவக்குமார், 52, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.