/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வனத்துறைக்கு சொந்தமான இடம் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
/
வனத்துறைக்கு சொந்தமான இடம் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
வனத்துறைக்கு சொந்தமான இடம் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
வனத்துறைக்கு சொந்தமான இடம் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
ADDED : டிச 20, 2024 01:15 AM
வனத்துறைக்கு சொந்தமான இடம்
நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்
குளித்தலை, டிச. 20-
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பள்ளி சீனிவாசன் நகரில், 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை, மதுரை உயர்நீதிமன்றம் சென்னை கிளையின் உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது.
டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாவட்ட வனச்சரக அலுவலர் தண்டபாணி, மண்டல துணை தாசில்தார் ஜெயவேல்பாரதிகாந்தன் ஆகியோர் முன்னிலையில், 50 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
முன்னதாக, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலகுமார் தலைமையில், உதவி பொறியாளர் நாகராஜன் முன்னிலையில், மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கும் பணி, மின்சார மீட்டர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முசிறி தீயணைப்புத் துறை வீரர்கள். அவசர உறுதி ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார், 30க்கும் மேற்பட்ட வனச்சரக ஊழியர்கள், 20க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள், 35க்கும் மேற்பட்ட
வருவாய்த்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.