ADDED : ஜூன் 03, 2025 01:02 AM
குளித்தலை, ளித்தலை அடுத்த, மொட்டகாமாநாயக்கனுாரில் உள்ள, மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாடு மாலை தாண்டும் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாலை தாண்டும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த, 14 மந்தையர்களை வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சலை எருது மாடுகளுக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க கோவில் எதிரே, 2 கி.மீ., தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர்.
அங்கு எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபி ேஷகம் செய்து, மாடுகள் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். 300க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடின. புதுக்கோட்டை மாவட்டம், சேமங்களம் அய்யாசீமை மந்தை மாடு முதலாவதாகவும், இரண்டாவதாக அதே அய்யாசீமை மந்தை மாடு மற்றும் ஆர்.டி.மலை வாலியம்பட்டி மந்தை மாடுகள் சேர்ந்து ஓடி வெற்றி பெற்றது.