/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்காலில் விழுந்த பசு மீட்பு
/
பாசன வாய்க்காலில் விழுந்த பசு மீட்பு
ADDED : ஜூன் 28, 2025 07:54 AM
கரூர்: கரூர் அருகே, பாசன வாய்க்காலில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார், 50; இவர், நேற்று காலை கரூர் அருகே சின்ன குளத்துப்பாளையம் அம்மா சாலை பகுதியில், பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பிறகு, நேற்று மாலை ஒரு பசு மாட்டை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சந்திர குமார், அம்மா சாலை பகுதியில், பசு மாட்டை தேடினார். அப்போது, அமராவதி ஆற்றின் பாசன கிளை வாய்க்காலில், ஆகாய தாமரை உள்ளிட்ட, முட்புதரில் சிக்கி, பசு மாடு விழுந்து ஏற முடியாமல் தவித்து கொண் டிருந்தது.
தகவல் அறிந்த, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, கயிறு மூலம் வாய்க்காலில் தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்டு, சந்திர குமாரிடம் ஒப்படைத்தனர். இதனால், சின்ன குளத்துப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.