/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க காத்திருப்பு போராட்டம்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 29, 2024 04:03 AM
கரூர்: கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமை வகித்தார். தி.மு.க., தேர்தலில் அளித்த வாக்குறுதி படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் பணியாளர் களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் மகாவிஷ்ணன், மாநில செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

