ADDED : மார் 11, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்து, மேட்டுப்பட்டி, வரகூர் சாலை செல்கிறது.
இந்த சாலையில் காவிரி
குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, குடியிருப்பு மக்களுக்கு காவிரி
நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி
வருகின்றனர். இந்நிலையில், மேட்டுப்பட்டி கிராம சாலையில் குடிநீர்
குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கோடை
காலத்தில் மக்களுக்கு தண்ணீர் வினியோகிப்பதில் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. எனவே, விரிசல் அடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து,
காவிரி நீர் வீணாகாமல் தடுக்க, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

