ADDED : மார் 15, 2026 08:13 AM
கிருஷ்ணராயபுரம்:கரூர்
மாவட்டம், சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து, மதுரை மேலுார் வரை
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படு-கிறது.
இந்த
திட்டம் மூலம், மதுரை மாவட்ட கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு
காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து குழாய் வழியாக
கொண்டு வரும் காவி-ரிநீர், கட்டளை புதிய வாய்க்கால் மேல்புறமாக
எடுத்து செல்-லப்படுகிறது.
இதில், வாய்க்கால் மேல்புறமாக உள்ள
காவிரி கூட்டு குடிநீர் குழாயில், அழுத்தம் காரணமாக விரிசல் ஏற்பட்டு
தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. இதனால், மதுரை வரை காவிரி நீர்
செல்வதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, விரிசல் ஏற்பட்டுள்ள
காவிரி கூட்டு குடிநீர் குழாயை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
