/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழாயில் விரிசல்: வீணாகி செல்லும் தண்ணீர்
/
குழாயில் விரிசல்: வீணாகி செல்லும் தண்ணீர்
ADDED : ஆக 02, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து கிராம மக்களுக்கு, காவிரி தண்ணீர் குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு, குழாய்கள் வழியாக வீடுகளுக்கு திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் சிந்தலவாடி கூட்டுறவு வங்கி அருகில், மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் காவிரி நீர் செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு அதிகமான நீர் வீணாகிறது. இதனால் மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாயை சரி செய்து மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி, காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.