/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் குழாய் விரிசல் வீணாகி வரும் தண்ணீர்
/
குடிநீர் குழாய் விரிசல் வீணாகி வரும் தண்ணீர்
ADDED : ஜன 03, 2025 01:08 AM
கிருஷ்ணராயபுரம், ஜன. 3-
பாலப்பட்டி பகுதியில் இருந்து, மேட்டுப்பட்டி பிரிவு சாலை வழியாக செல்லும் காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து வல்லம், கொம்பாடிப்பட்டி, பாலப்பட்டி, மேட்டுபட்டி, வயலுார், திருமேனியூர் வழியாக கிராமங்களுக்கு குழாய் வழியாக காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், பாலப்பட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பட்டி பிரிவு சாலை செல்லும் வழிடத்தில், குடிநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணானது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் குறைந்தளவில் செல்கிறது. குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

