/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு
/
வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு
வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு
வாய்க்கால் பாலத்தில் விரிசல்: சிமென்ட் கலவை பூச்சு
ADDED : செப் 26, 2024 02:05 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் தென்கரை பாசன வாய்க்கால் நடுவே உள்ள பாலத்தின் சாலையில் விரிசலால், சிமென்ட் பூச்சு மூலம் சரி பார்க்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் தென்கரை வாய்க்கால் செல்-கிறது. இந்த வாய்க்கால் நடுவே, ரயில்வேகேட் சாலை முதல் அம்மா பூங்கா வரை செல்லும் சாலையில், புதிய பாலம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த சாலை வழியாக அம்மா பூங்கா, காவிரி கதவணை, மீன் மார்க்கெட் ஆகிய இடங்க-ளுக்கு வாகனங்களில் செல்கின்றனர்.
இந்நிலையில் பாலத்தின் சாலை நடுவில் சிறிய அளவிலான விரிசல் உள்ளது. இந்த விரிசல் காரணமாக சாலை வழியாக வாக-னங்கள் செல்லும் போது பாலம் பழுது ஏற்படும் நிலை உள்ளது.
இதனை தடுக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில் புதிய பாலம் நடுவில் உள்ள சிறிய விரிசல்களை கண்டறிந்து சிமென்ட் கலவை கொண்டு பூசும் பணி நடந்தது. இந்த பணிகளில் நீர்வ-ளத்துறை
நிர்வாகத்தினர் பார்வையிட்டனர்.