/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கல் முகாம்
/
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கல் முகாம்
ADDED : ஜூலை 05, 2024 12:57 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் குறைந்த வட்டியில் பொருளாதார மேம்பாட்டிற்கு டாப்-செட்கோ கடன், தாட்கோ கடன் போன்ற திட்டம் செயல்படுத்தப்-படுகிறது.
இதில், கடன் வழங்கும் முகாம் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் நேற்று நடந்தது.கரூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில் ஜவகர் பஜார், பஸ் ஸ்டாண்ட் அருகில், வெங்கமேடு ஆகிய இடங்களில் கடன் வழங்கும் முகாம் நடந்தது. மாநகராட்சி மண்டல தலைவர் ராஜா தொடங்கி வைத்தார். முகாமில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொது-மக்கள், தங்களுக்கு ஏற்றவாறு தொழில் நடத்த விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு கடன் வழங்கப்பட்டது.முகாமில் கூட்டுறவு இணை பதிவாளர் கந்தராஜ், பொது செயல் ஆட்சியர் சந்திரன், பொது மேலாளர் குணநாதன், மேலாளர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.