தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் கிடப்பில் போடப்பட்ட கிரிக்கெட் மைதான பணி

கரூரில் கிடப்பில் போடப்பட்ட கிரிக்கெட் மைதான பணி

கரூரில் கிடப்பில் போடப்பட்ட கிரிக்கெட் மைதான பணி


ADDED : ஜூன் 26, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர், அரசு மருத்துவக் கல்லுாரியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்-பட்டுள்ளது.

கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்-லுாரியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் படித்து வருகின்றனர். இங்குள்ள விடு-தியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாண-வியர் தங்கி உள்ளனர். மாணவர்கள் வசதிக்காக, கல்லுாரி விடுதி எதிரில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. மேலும், அங்கு விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், மருத்துவ பேராசிரியர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வரு-கின்றனர்.இந்த மைதானத்தில் விடுதி மாணவர்கள் நிதி-யான, 4 லட்சம் ரூபாயில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இடம் சீரமைக்கப்-பட்டு, கிரிக்கெட் பிட்ச், பயிற்சி மேற்கொள்ள இரண்டு வலை பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்-ளது. ஆனால், மைதானத்தை சுற்றியுள்ள மணல் பரப்பாமல் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால், மாணவர்கள் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து கல்லுாரி நிர்வாகத்தில் முறை-யிட்டால், வெளியில் மணல் கொண்டு வர பல்-வேறு சட்ட சிக்கல் உள்ளன.

இதற்கு வருவாய்துறையினர் உள்பட பல்வேறு துறை அனுமதி தேவைப்படுகிறது என கூறி, காலத்தை கடத்தி வருகின்றனர். தற்போது மைதானத்தில் செடி, கொடிகள் வளர்ந்து வருகி-றது. உடனடியாக கிடப்பில் போடப்பட்ட பணி-களை விரைவில் முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us