/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
/
ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
ADDED : அக் 11, 2024 12:57 AM
ஆயுத பூஜையை முன்னிட்டு
மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம்
கரூர், அக். 11--
ஆயுத பூஜையையொட்டி, கரூர் காமராஜ் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை இன்று, விஜயதசமி நாளை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை தினத்தன்று உழைப்புக்காக, வருமானத்துக்காக பயன்படுத்தும் எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து மரியாதை செய்ய வேண்டும். மேலும், கல்வி ஞானத்தை தரக்கூடிய படிக்கும் புத்தகங்களுக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி மரியாதை செலுத்த வேண்டும்.
இந்தாண்டு ஆயுதபூஜையையொட்டி, காமராஜ் மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் மற்றும் காய்கறி, பழங்கள் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பொரி, அவுல், கடலை மற்றும் பழங்கள், வாழைகள் வாங்க பொதுமக்கள் நேற்று காலை முதலே குவிந்து இருந்தனர். மக்கள் அதிகளவில் திரண்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை அலங்கரிக்க தேவையான தோரணங்கள், அலங்கார பொருட்களும் விற்பனையானது.
கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குழந்தைவேல் சாலையில் உள்ள பூ மார்க்கெட்டில் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களின் விலை, கடந்த ஆண்டைவிட சற்று அதிகமாக இருந்தது.
மேலும் பழங்கள் மற்றும் பூக்களின் விலை சராசரி நாட்களை காட்டிலும் கூடுதலாக இருந்தது. இருப்பினும், பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறோம் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.