/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து இன்று முதல் கிரஷர் லாரிகள் வேலை நிறுத்தம்

ADDED : பிப் 13, 2025 03:06 AM
கரூர்: கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்கா-ததை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்-தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக, மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் பேசினார். கரூரில், மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரி-மையாளர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: கிரஷரில் ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் லோடு ஏற்றி செல்லும்போது, கிரஷர் நிறுவ-னங்கள் டிரான்சிட் பாஸ் வழங்குவதில்லை.
இதனால், அதிகா-ரிகள் சோதனை நடத்தி லாரியை பறிமுதல் செய்வதோடு, லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதித்து கைது செய்கின்றனர். வாடகைக்கு லோடு ஏற்றி செல்லும் லாரி உரிமை-யாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கிரஷர் நிறுவனத்-தினர் டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, அனைத்து மாவட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்-தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பிரச்னையால் நாமும் பாதிக்கப்-பட்டுள்ளோம். எனவே, இன்று முதல் (13ம் தேதி) காலவரை-யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு, பேசினார்.துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் சரத்-குமார், பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.