/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெண்ணந்துார் பகுதியில் வெள்ளரி அறுவடை தீவிரம்
/
வெண்ணந்துார் பகுதியில் வெள்ளரி அறுவடை தீவிரம்
ADDED : மார் 24, 2025 06:50 AM
வெண்ணந்துார்: தமிழகத்தில் பருவமழை போதிய அளவில் பெய்ததால், வெண்ணந்துார் பகுதியில் விவசாயிகள், 20 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்தனர். நன்கு வளர்ந்து, தற்போது வெள்ளரி பிஞ்சுகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இதுகுறித்து, தச்சன் காடு பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், 'வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆண்டுதோறும் வெள்ளரி பிஞ்சு சாகுபடி செய்து வருகிறோம். 40 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. இதனை உள்ளூர், வெளியூரிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். வெள்ளரி பிஞ்சு, கோடையில் உடல் சூட்டை தணிக்க பெரிதும் பயன்படுகிறது. வியாபாரிகள் வெள்ளரி அதிகளவில் வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ வெள்ளரி பிஞ்சு, 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்' என்றார்.