/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சோளம் அறுவடை நிறைவு பெற்ற நிலையில் அவுரி செடி சாகுபடி
/
சோளம் அறுவடை நிறைவு பெற்ற நிலையில் அவுரி செடி சாகுபடி
சோளம் அறுவடை நிறைவு பெற்ற நிலையில் அவுரி செடி சாகுபடி
சோளம் அறுவடை நிறைவு பெற்ற நிலையில் அவுரி செடி சாகுபடி
ADDED : ஆக 01, 2024 07:28 AM
கரூர் : அமராவதி அணை நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பாசன பகு-திகளில் சோளம் அறுவடை நிறைவடைந்த நிலையில், தழைச்சத்-துக்காக அவுரி பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்-டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும், ஆடி மாத இறு-தியில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், அமராவதி அணையின் நீர்மட்டம், 88 அடியை தாண்டியுள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்-ளது. மேலும், அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளான கிருஷ்ண-ராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டா-ரங்களில் விவசாயிகள், மழையை நம்பி சோளம் பயிரிட்டனர். தற்போது, சோளம் முற்றிய நிலையில் அறுவடை பணிகள் துவங்-கியுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மழையை நம்பி பயிரி-டப்பட்ட சோளம் தற்போது, அறுவடை செய்யப்பட்டு வருகி-றது. கோழி தீவனம், பிஸ்கட் மற்றும் உணவுக்காக சோளம் அதிக-ளவில் பயன்படுகிறது. கடந்தாண்டு, 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 6,000 ரூபாய் வரை விலை போனது. தற்போது, 4,800 ரூபாய்க்குதான் விலை போகிறது. காரணம், ஆடி மாதத்தில் மழை பெய்யாமல் காற்று அடிக்க வேண்டும். ஆனால், நடப்பு ஆடி மாதத்தில் மழை பெய்து விட்டதால், சோளம் விளைச்சல் குறைந்து, விலை அதிகரிக்கவில்லை. மேலும், கேரளா உள்-ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அமரா-வதி அணையின் நீர்மட்டம், 90 அடியை இன்று அல்லது நாளை எட்டி விடும். அப்போது, பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும். நெல் சாகுபடிக்-காக, சோளம் அறுவடையை தீவிரப்படுத்தியுள்ளோம். அறு-வடை முடிந்த பிறகு, நெல் சாகுபடிக்காக, தழைச்சத்து எனப்-படும், அவுரி பயிரிட நிலத்தை தயார்ப்படுத்தி வருகிறோம். இவ்-வாறு கூறினர்.