/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சைக்கிள் போட்டி: 159 பேர் பங்கேற்பு
/
கரூரில் சைக்கிள் போட்டி: 159 பேர் பங்கேற்பு
ADDED : ஜன 05, 2025 07:22 AM
கரூர்: கரூரில் நடந்த சைக்கிள் போட்டியில், 159 பேர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நடந்தது. மேயர் கவிதா போட்டியை தொடங்கி வைத்தார். இதில்,  13 வயதிற்குட்பட்ட மாணவியர் -10 கி.மீ., துாரம், 15 முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவியர்-, 15 கி.மீ., துாரம், 15 முதல், 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள்,- 20 கி.மீ., துாரம் போட்டி நடந்தது.முதலிடம்,  -5,000 ரூபாய்  வீதம் ஆறு பேருக்கும், இரண்டா-மிடம், -3,000 ரூபாய் வீதம் ஆறு பேருக்கும், மூன்றாமிடம் பெற்-றவர்களுக்கு, 2,000 ரூபாய் வீதம் ஆறு பேருக்கும் வழங்கப்பட்-டது. போட்டியில், 92 மாணவர்கள், 67 மாணவியர் என மொத்தம், 159 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., கண்ணன், துணை மேயர் தரணி சர-வணன்,  மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்,

