/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சைக்கிள் போட்டி: அமைச்சர் பரிசு வழங்கல்
/
சைக்கிள் போட்டி: அமைச்சர் பரிசு வழங்கல்
ADDED : மார் 03, 2025 07:30 AM
கரூர்: கரூர் அரசு காலனியில், முதல்வர் ஸ்டாலினின், 72-வது பிறந்த நாளையொட்டி மாவட்ட தி.மு.க., சார்பில் சைக்கிள் போட்டி நடந்தது. மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். தொடர்ந்து, மாவட்ட செயலாளரும், மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆண்கள் பிரிவு போட்டியில், மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த மனோஜ்குமார் முதலிடத்தையும், சிவாயத்தை சேர்ந்த விக்னேஷ்வரன், 2ம் இடத்தையும், வேங்காம்பட்டியை சேர்ந்த ஹரீஸ், 3ம் இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல் அரசு காலனியில் இருந்து எல்லைமேடு வரை நடந்த பெண்கள் பிரிவு போட்டியில், வயலுாரை சேர்ந்த தேனருவி முதலிடத்தையும், பாலவிடுதியை சேர்ந்த தேசபிரியா, 2ம் இடத்தையும், மறவாபாளையத்தை சேர்ந்த ரமணிஸ்ரீ, 3ம் இடத்தையும் பெற்றனர். இந்த போட்டிகளில், இரண்டு பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முறையே, 15,000 ரூபாய், 12,000 ரூபாய், 10,000 ரூபாய் மற்றும் 4 முதல் 10ம் இடம் வரை பெற்றவர்களுக்கு, 3,000 ரூபாய் பரிசு தொகை, கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.