/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணல் கடத்தலால் தினந்தோறும் கோஷ்டி மோதல் அசம்பாவிதம் ஏற்படும்; அச்சத்தில் மக்கள்
/
மணல் கடத்தலால் தினந்தோறும் கோஷ்டி மோதல் அசம்பாவிதம் ஏற்படும்; அச்சத்தில் மக்கள்
மணல் கடத்தலால் தினந்தோறும் கோஷ்டி மோதல் அசம்பாவிதம் ஏற்படும்; அச்சத்தில் மக்கள்
மணல் கடத்தலால் தினந்தோறும் கோஷ்டி மோதல் அசம்பாவிதம் ஏற்படும்; அச்சத்தில் மக்கள்
ADDED : ஏப் 27, 2024 09:56 AM
ப.வேலுார்: ப.வேலுார் காவிரி பகுதிகளான அண்ணா நகர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, வெங்கரை, பொத்தனுார் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் டூவீலர்களில் மூலம் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது. அப்போது ஏற்படும் கோஷ்டி மோதலால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ப.வேலுார் அருகே, அனிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 40. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா, 42, என்வருக்கும் மணல் கடத்தல் சம்பந்தமாக முன் விரோதத்தால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராஜா தாக்கியதில், ராஜேஷ் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல், நேற்று முன்தினம் நன்செய் இடையாறில் இருதரப்பு கோஷ்டி மோதலால் பதற்றம் அடைந்த மக்கள், ப.வேலுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொத்தனுார் காவிரி ஆறு குடிநீர் தொட்டி பகுதியில், டூவீலரில் மண் அள்ளிக்கொண்டிருந்த நபர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, பொத்தனுார், வெங்கமேடு, குடிநீர் தொட்டி வளாகத்தில் கோஷ்டி மோதலால் இருதரப்பும் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.இவ்வாறு, தினந்தோறும் மாறி, மாறி மணல் கடத்தலால், கோஷ்டி மோதல் அதிகரித்து சண்டை நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: காவிரி கரையோர பகுதிகளில் மூட்டை மணல் திருட்டு அதிகளவில் நடக்கிறது. இதனால் அடிக்கடி தகராறு நடக்கிறது. மணல் திருட்டை தடுக்க தனிப்படை அமைத்து இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினால் மட்டுமே, மணல் திருட்டை தடுக்க முடியும். மேலும், இரவு, 12:00 மணிக்கு மேல், ஆங்காங்கே சில இளைஞர்கள் நின்று கொண்டு போலீஸ் வாகனங்கள் வருகிறதா என வேவு பார்த்து மணல் திருடர்களுக்கு தகவல் கொடுக்கின்றனர்.
மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களையும், அவர்களிடம் இருந்து மணல் வாங்கி விற்கும் மணல் மாபியாக்களை கைது செய்தால் மட்டுமே மணல் திருட்டை தடுக்க முடியும். கோஷ்டி மோதலால் உயிர் சேதம் ஏற்படும் முன், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

