ADDED : மே 15, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் கம்மநல்லுார் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்பு சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கம்மநல்லுார் பஞ்சாயத்தில், சிறிய பாசன வாய்க்கால் செல்கிறது. இதன் நடுவில் பாலத்துடன் சிறிய தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பாலம் வழியாக மகாதானபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து, மக்கள் கம்மநல்லுார் கிராமத்திற்கு செல்கின்றனர். தற்போது சிறிய பாசன வாய்க்கால் தடுப்பு சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. சேதமடைந்துள்ள பாலத்தின் தடுப்பு சுவரை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
