/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாதாள சாக்கடை தொட்டி சேதம் கால்வாயில் செல்லும் கழிவுநீரால் ஆபத்து
/
பாதாள சாக்கடை தொட்டி சேதம் கால்வாயில் செல்லும் கழிவுநீரால் ஆபத்து
பாதாள சாக்கடை தொட்டி சேதம் கால்வாயில் செல்லும் கழிவுநீரால் ஆபத்து
பாதாள சாக்கடை தொட்டி சேதம் கால்வாயில் செல்லும் கழிவுநீரால் ஆபத்து
ADDED : அக் 24, 2025 01:14 AM
கரூர், கரூர் ரயில்வே காலனியில், இணைப்பு தொட்டி சேதம் காரணமாக, வடிகால் கால்வாயில் பாதாள சாக்கடை கழிவுநீர் நேரடியாக திறந்து விடப்பட்டு வருகிறது.கரூர் மாநகராட்சியின் கழிவு
நீர் சுத்திகரிப்பு நிலையம், வாங்கல் சாலையில் உள்ள அரசு காலனியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் நகரம், இனாம்கரூர் பகுதிகளை சேர்ந்த, 15,000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் பாதை, பசுபதிபாளையம், பாலம்மாள்புரம் ஆகிய இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு, அங்கிருந்து அரசு காலனி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவுநீர் கொண்டு வரப்படுகிறது.
இங்கு, வேதி பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின், விவசாயத்திற்கு தண்ணீர் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது. தினமும், 6 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கரூர் ஐந்து ரோடு அருகில் ரயில்வே காலனியில், பாதாள பாதாள சாக்கடை இணை தொட்டி உள்ளது.
பசுபதிபாளையம், மக்களை் பாதை, இனாம் கரூர் பகுதியில் இருந்து, இந்த இணைப்பு தொட்டி வழியாக பாலம்மாள்புரம் செல்கிறது. அங்கிருந்து அரசு காலனி சுத்திகரிப்பு நிலையம் சென்று, கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ரயில்வே காலனி இணைப்பு தொட்டி சேதமாகி விட்டதால், அங்கிருந்து கழிவுநீர் செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. எந்தவிதமான சுத்தகரிப்பும் செய்யாமல் கழிவுநீர் பல்வேறு பகுதிகளில், வடிகால் கால்வாய்களில் திறந்து விடப்படுகிறது. தொட்டி சேதமாகி ஒரு மாதமான நிலையில், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
கரூர் மாநகராட்சி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் கூறுகையில்,'' மாநகராட்சி அரசு காலனி சுத்திகரிப்பு நிலையம் முழு அளவில் செயல்படவில்லை. ரயில்வே காலனி இணைப்பு தொட்டி சேதத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.

