/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டு குடிநீர் குழாய் சேதம்: வீணாகிய காவிரி தண்ணீர்
/
கூட்டு குடிநீர் குழாய் சேதம்: வீணாகிய காவிரி தண்ணீர்
கூட்டு குடிநீர் குழாய் சேதம்: வீணாகிய காவிரி தண்ணீர்
கூட்டு குடிநீர் குழாய் சேதம்: வீணாகிய காவிரி தண்ணீர்
ADDED : நவ 20, 2025 02:47 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த தொண்டமாகினம் பஞ்., கொத்தமல்லிமேடு பகுதியில், காவிரி கூட்டு குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தொண்டமங்கலம், கொசூர், மத்தகிரி கிராமங்களுக்கு காவிரி குடிநீர் கொண்டு
செல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், கொத்தமல்லிமேடு பகுதியில் உள்ள ஒருவர், அனுமதி இல்லாமல் பொக்லைன் இயந்திரம் மூலம், காவிரி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே குழி தோண்டி உள்ளார். அப்போது அருகில் பதிக்கப்பட்டு இருந்த, குடிநீர் குழாய் சேதமாகி, 40 அடி உயரத்துக்கு மேல் பீயச்சி அடித்து தண்ணீர் வெளியேறியது. இந்த குடிநீர், 1 கி.மீ., தொலைவிற்கு ஆங்காங்கே தேங்கி நின்றது.
பின், காவிரி குடிநீர் பணியாளர்கள் மின் மோட்டாரை அணைத்து குடிநீரை நிறுத்தினர். இதனால். கொசூர், தொண்டமாங்கினம், மத்தகிரி ஆகிய கிராமங்களுக்கு காவிரி குடிநீர் செல்லாமல் தடைபட்டது. இதனால் பொதுமக்கள குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகினர்.

