/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆற்றுப்பாலத்தில் தரைத்தளம் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
ஆற்றுப்பாலத்தில் தரைத்தளம் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஆற்றுப்பாலத்தில் தரைத்தளம் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஆற்றுப்பாலத்தில் தரைத்தளம் சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூலை 05, 2025 02:02 AM
கரூர், கரூர்-திருமாநிலையூர் பகுதியை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், தரைத்தளம் சேதம் அடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மற்றும் திருமாநிலையூர் நகரங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே, லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், 1996-2001ல், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.
அப்போது, பாலத்தின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிந்ததால், அமராவதி ஆறும் வெளிச்சத்தில் திளைத்தது. தற்போது, பாலத்தில் உள்ள, பெரும்பாலான மின் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது.
மேலும், பாலத்தின் தரைத்தளம் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரி கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
கரூர் நகரில் இருந்து, திருச்சி, திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், இந்த பாலம் வழியாக செல்கின்றன. இதனால், உயர் மட்ட பாலத்தில் தரைத்தளத்தை சீரமைத்து, அனைத்து மின் விளக்குகளையும் எரிய வைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.