/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
/
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 19, 2025 01:12 AM
கரூர், கரூர் அருகே, ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அரிக்காரன்பாளையத்தில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக, நாள்தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் செல்லும் உயர்மட்ட ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். குறிப்பாக, ரயில்வே பாலத்தில் கான்கிரீட் கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளது. மேலும், நடைபாதையில் உள்ள சிலாப் கற்கள், பல மாதங் களாக பெயர்ந்துள்ளது.இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள், நடைபாதையில் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரன்பாளையம் ரயில்வே பாலத்தில், சேதம் அடைந்துள்ள தரைத்
தளத்தை சீரமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

