/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர்கள் பாதிப்பு
/
வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 03, 2025 01:10 AM
கிருஷ்ணராயபுரம், வல்லம் பகுதியில் உள்ள, வாய்க்கால் பால தடுப்புச்சுவர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வல்லம் கிராமம் வழியாக மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. கட்டளை வாய்க்கால் நடுவில் பாலம் உள்ளது. பாலம் வழியாக விவசாயிகள் நடந்து செல்கின்றனர்.
தடுப்பு பாலம் சுவர் மிகவும் மோசமாக இருப்பதால், விவசாயிகள் அச்சத்துடன் செல்கின்றனர். தடுப்பு சுவர்கள் தற்போது சிதலமடைந்து மிகவும் மோசமாக இருக்கிறது.
மேலும் விளை பொருட்கள் கொண்டு செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. எனவே, நடைபாலத்தை சரி செய்ய, நீர்வளத்துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.