/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதம் அடைந்த அமராவதி ஆற்றின் தரைப்பாலம்
/
சேதம் அடைந்த அமராவதி ஆற்றின் தரைப்பாலம்
ADDED : ஜன 27, 2024 04:27 AM
கரூர்: கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பாலத்தில் சேதம் அடைந்துள்ள, தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் நகரம் - பசுபதிபாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், ஐந்து சாலை பகுதியில் அமராவதி ஆற்றின் குறுக்கே, சில ஆண்டுகளுக்கு முன், புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
புதிய பாலத்தின் கட்டிட பணிகள் துவங்கிய போது, அமராவதி ஆற்றில் பொதுமக்கள் செல்லும் வகையில், தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தை, ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, அமராவதி அணையில் இருந்து திறக்கப் பட்ட தண்ணீர் மற்றும் மழை காரணமாக, தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, பாலம் அமைக்கப் போடப்பட்ட ராட்சத குழாய்கள் வெளியே தெரிகிறது.
இதனால், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சேதம் அடைந்துள்ள தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, அமராவதி ஆற்றில் சேதம் அடைந்துள்ள, தரை மட்ட பாலத்தை சீரமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

