ADDED : டிச 02, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., 6, 7வது வார்டு பகு-தியில் உள்ள குழந்தைகள், வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர்.
கடந்த, 4 ஆண்-டுகளாக கட்டடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அருகே உள்ள நேரு யுவகேந்திரா இளைஞர் நற்-பணி மன்ற கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள், பொது மக்கள் நலன் கருதி, சேதமான அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்-ளனர்.