ADDED : ஏப் 03, 2024 02:03 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்-சேலம்
பழைய சாலை, வெண்ணைமலை பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும்
வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், அந்த
பகுதியில் வைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என். எல்., இணைப்பு பெட்டி, பல
மாதங்களாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது. திறந்தபடி உள்ள பெட்டியில்
மழை பெய்யும் போது, மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது. இதனால், தொலைபேசி
இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, சேதம் அடைந்த பி.எஸ்.என்.எல்.,
பெட்டியை உடனடியாக மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
