/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் இந்திரா நகரில் சேதமான மின்கம்பம்
/
கரூர் இந்திரா நகரில் சேதமான மின்கம்பம்
ADDED : ஜூலை 23, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் தெற்கு காந்திகிராமம், இந்திராநகரில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பம் சேதமடைந்துள்ளது. மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. மின் கம்பத்தில் அதிகளவில் செடிகள் முளைத்துள்ளன.
தொடர்ந்து சேதமடைந்து வருவதால் போதுமான பிடிமானம் இல்லாமல் சிமென்ட் கம்பம், கீழே சாயும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.