ADDED : மே 30, 2026 05:04 AM

அரவக்குறிச்சி:கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஜவுளி பூங்கா பகுதியில் அமைந்துள்ள அரவக்குறிச்சி காவல்துறை சார் பில் அமைக்கப்பட்ட சோதனை சாவடி சேதம டைந்து, மேற்கூரை விழும் நிலை காணப்படுகிறது.
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜவுளி பூங்கா பகுதியில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் கொண்டது. புத்தாம்பூர், ஜவுளி பூங்கா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கரூர், அரவக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இத்தகைய முக்கிய பகுதியில், பாதுகாப்பு பணிக்காக அமைக்கப்பட்ட காவல்துறை சோதனை சாவடி மையம் பயனற்று, பூட்டப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகிறது. சோதனை சாவடி மையத்தின் மேற்கூரை உடைந்து, எந்த நேரத்திலும் விழக்கூடிய அபாய நிலையில் இருப்பதால், அப்பகுதி வழியாக செல்வோர் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு சாவடி மையத்தை சீரமைத்து, உடைந்த இரும்பு மேற்கூரைகளை மாற்றி, போலீசார் நிரந்தரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
